Ads Top

இந்து கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்புக்காக ரூபா பத்து லட்சத்து ஐம்பது ஆயிரம் வட மாகாணசபை உறுப்பினர் கே. என். விந்தன் கனகரத்தினம் ஒதுக்கியுள்ளார்


வடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான கே.என். விந்தன் கனகரத்தினம் தனக்குரிய 2017 ஆம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்து கிறிஸ்தவ ஆலயங்க ளின் புனரமைப்பு மற்றும் தளபாடக் கொள்வனவுகளுக்காக ரூபா பத்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் ஒதுக்கியுள்ளார்.

கிறிஸ்தவ ஆலயங்களின் பங்குத்தந்தையர்களும் இந்து ஆலயங்களின் தலைவர்களும் வடமாகாணசபை உறுப்பினர் அவர்களை தமது ஆலயங்களுக்கு அழைத்து ஆலயங்களின் தேவைகள் பற்றியும் புனரமைப்புப் பற்றியும் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்த வடமாகாணசபை உறுப்பினர் திரு. கே.என்.விந்தன் கனகரத்தினம் அவர்கள் இந் நிதியை குறித்த ஆலயங்களுக்கென ஒதுக்கியுள்ளார்.

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயம் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயம் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயம் (நெடுந்தீவு பங்கு) தளபாடக் கொள்வனவுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், நெடுந்தீவு புனித சந்தியோகுமயோர் ஆலயம் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம்,  பலாலி தெற்கு வயாவிளான் புனித யாகப்பர் ஆலயம் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம்,  பருத்தியடைப்பு ஸ்ரீ கதிரேசன் ஆலய முத்து மலர் மண்டபம் மின் விசிறிகள் கொள்வனவுக்காக  ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், வேலணை கண்ணாவோடை நாச்சிமார் கோவில் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், சரவணை ஸ்ரீ செல்வக்கதிர்காம முருகன் ஆலயம் தேர் அமைக்கும் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம்,  மண்டைதீவு தில்லேஸ்வரர் கோவில் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம்,  ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம்,  நெடுந்தீவு மேற்கு ஈச்சம்புலவு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம்,  வண்ணை கோட்டையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், இலங்கை உலக சைவத்திருச்சபை சாவகச்சேரி ஒலிபெருக்கிகள் கொள்வனவுக்காக  ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம்  என பத்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.