நாற்பது வறிய நிலைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக விந்தன் கனகரத்தினம் இருபது இலட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேருக்கும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி (CBG) - 2017 6 மில்லயனுக்கு மேலாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி (PSDG) ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் ரூபா 4 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. தனக்குரிய ரூபா 4 மில்லியனில் மாகாணசபை உறுப்பினர் கே. என். விந்தன் கனகரத்தினம் நெடுந்தீவு மேற்கு மாதர் அபிவிருத்திச் சங்கத்திற்கு விற்பனைக் கூடம் அமைப்பதற் கும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்குமாக ரூபா இருபது இலட்சம் ஒதுக்கியுள்ளார்.
குறித்த தொகையில் விற்பனைக் கூடம் அமைப்பதற்கு ரூபா பதினைந்து இலட்சம் (1,500,000.00), மா அரைக்கும் இயந்திரம் ரூபா அறுபது ஆயிரம் (60,000.00), ஈர அரிசி அரைக்கும் இயந்திரம் ரூபா நாற்பத்து ஐந்து ஆயிரம் (45,000.00), மிளகாய் தூள் அரைக்கும் இயந்திரம் ரூபா அறுபது ஆயிரம் (60,000.00), உழுந்து அரைக்கும் இயந்திரம் ரூபா அறுபது ஆயிரம் (60,000.00), 1000 லீற்றர் நீர் தாங்கி ரூபா பதினெட்டு ஆயிரம் (18,000.00), நீர்த்ததாங்கி ஸ்ராண்ட் ரூபா முப்பத்து ஐந்து ஆயிரம் (35,000.00), குளிர்சாதனப் பெட்டி ரூபா தொன்னூறு ஆயிரம் (90,000.00), 20 கதிரை Wood ரூபா நாற்பத்து ஆயிரம் (40,000.00), 3 phase மின்சாரம் ரூபா எண்பது ஆயிரம் (80,000.00), பைப் லைன், வயரிங் ரூபா பன்னிரெண்டு ஆயிரம் (12,000.00) என மொத்தமாக ரூபா இருபது இலட்சம் (2,000,000.00) ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் புளுக்கொடியல், பனாட்டு, வடகம், ஒடியல் மா, புழுக்கொடியல் மா, பலகாரங்கள், மோர் மிளகாய், ஊறுகாய், கருவாடு என்பன பொதியிட்டு விற்றல், உணவுப் பொருட்கள் உற்பத்தி போன்ற சுய தொழில் செயற்திட்டங்களை நாற்பது குடும்பங்களும் மேற்கொண்டு தங்கள் வாழ்க்கைச் செவுக்கான வருமானத்தை ஈட்டுவதற்கு இத் திட்டம் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.
வடமாகாணத்திலேயே நெடுந்தீவானது சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற இடமாக விளங்குவதோடு, அண்மைக் காலமாக உல்லாசப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதோடு, வெளிநாட்டவர்களும் உள்ளூர் வாசிகளும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து வருபவர்களும் நெடுந்தீவில் இத் தகைய பொருட்களை விரும்பி வாங்குவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. வட மாகாணத்திலேயே நெடுந்தீவிலேயே அதிகமான பனை மரங்களும், அதன் வளங்களும் காணப்படுகின்றன. குறித்த திட்டத்தினை வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் முன்னெடுக்கும். ஆத்தோடு இத் திட்டத்தினைச் செயற்படுத்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் நெடுந்தீவுக்கான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் அனுமதியும் பெறப்பட்டுள்ளதோடு, அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இத் திட்டம் நெறிப்படுத்தப்படும். குறித்த திட்டத்திற்கான முன்மொழிவை வட மாகாணசபை அமைச்சர் சபையும் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: