பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக ரூபா நான்கு இலட்சம் வட மாகாணசபை உறுப்பினர் கே. என். விந்தன் கனகரத்தினம் அவர்கள் ஒதுக்கியுள்ளார்
வடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான கே.என். விந்தன் கனகரத்தினம் அவர்கள் தனக்குரிய 2017 ஆம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திப் பணிகளுக் காக ரூபா நான்கு இலட்சம் ஒதுக்கியுள்ளார்.குறித்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் வட மாகாணசபை உறுப்பினர் அவர்களை அழைத்து, தங்களது சங்கங்களின் அபிவிருத்தி பற்றியும் அதன் தேவைககள் பற்றியும் கலந்துரை யாடியதைத் தொடர்ந்து, தேவைகளின் அவசியத்தை அறிந்து, இந் நிதியினை இவர் ஒதுக்கியுள்ளார்.
இதில், வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆகியனவற்றிற்கு போட்டோ பிரதி இயந்திரங்கள் கொள்வனவு செய்வதற்காக தலா ஒரு இலட்சம் வீதமும், நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு கனணி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சமும், ஊர்காவற்றுறை - நாரந்தனை ஆறாம் கிளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு புனரமைப்புப் பணிக்காக ரூபா ஒரு இலட்சமும் என நான்கு இலட்சம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை: