எழுக தமிழை நீதிவேண்டிய தமிழ்
மக்களின் அணிதிரள்வாகவே பார்க்கவேண்டும்
- வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்
எழுக தமிழை கட்சி அரசியல் ரீதியில் அல்லாமல் மக்களின் அவலங்களை வெளிப்படுத்துதல் என்ற கோணத்திலேயே அணுகி செயற்படவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கைக்கான அடிப்படைகள் இன்றும் ஏற்படுத்தப்படாமல் உள்ளன. ஓர் இனம் தமது சொந்த நாட்டிலேயே இன ஒடுக்கு முறைக்கு
உள்ளாக்கப்படுகின்றமை, போர் நடைபெற்ற போதும் இறுதிப்போரின் போதும் அதற்குப் பின்னரும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிட்டாமை போன்றன இன்றைய நிலைமைகளை எமக்கு அவநம்பிக்கையே தருகின்றன. இன்றும் நீதிக்குப் புறம்பான ஆக்கிரமிப்புக்களுக்கு நாம் உள்ளாகின்றோம். இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி, காணாமல் போனோருக்கான பொறுப்புச் சொல்லுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கம் என ஏராளமான பிரச்சினைகள் எம்மை பின் தொடர்கின்றன.
உள்ளாக்கப்படுகின்றமை, போர் நடைபெற்ற போதும் இறுதிப்போரின் போதும் அதற்குப் பின்னரும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிட்டாமை போன்றன இன்றைய நிலைமைகளை எமக்கு அவநம்பிக்கையே தருகின்றன. இன்றும் நீதிக்குப் புறம்பான ஆக்கிரமிப்புக்களுக்கு நாம் உள்ளாகின்றோம். இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி, காணாமல் போனோருக்கான பொறுப்புச் சொல்லுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கம் என ஏராளமான பிரச்சினைகள் எம்மை பின் தொடர்கின்றன.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் சில முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளன. எனினும் அவை தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமைகளுக்கான போதுமான பரிகாரங்களாக அமையவில்லை. இவ்வாறான ஓர் சூழ்நிலையில் எமது மக்களின் அவலத்திற்கும் இனப்பிரச்சினைக்கும் இதயசுத்தியுடனான நிரந்தரமான தீர்வு வேண்டும். இந்த அபிலாசையை வலியுறுத்தியே எம் மக்கள் வீதிக்கு இறங்குகின்றனர்.
எழுக தமிழ் தொடர்பாக தமிழ்த் தேசியத்தில் வாதப்பிரதிவாதங்கள் இருக்கின்றன. ஒருசாரார் எழுக தமிழ் நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பத்தினை தொலைத்துவிடும் என்கின்றனர். மறுதரப்பார் எழுகதமிழ் காலத்தின் தேவை எனவும் கருதுகின்றனர். எல்லோருக்கும் பலதரப்பட்டாவறு சிந்திப்பதற்கான சுதந்திரமும் மாற்றுக்கருத்திற்கான சுதந்திரமும் இருக்கின்றது. எனினும் எழுக தமிழ் குறித்து எதிரான விமர்சனங்களை முன்வைப்போர் இனப் பிரச்சினைத் தீர்வில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட ஏமாற்றுத்தனங்களை சீர்தூக்கிப் பார்த்துவிட்டு அபிப்பிராயம் தெரிவிக்கவேண்டியுள்ளது. எழுக தமிழ் வாயிலான மக்கள் எழுச்சி என்பது நீதி கேரிய எழுச்சியே ஆகும். இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரிய மக்களின் திரள்வு ஆகும். அவ்வாறு இருக்கையில், நீதிவேண்டிய நகர்வு நல்லிணக்கத்தினைப் பாதிப்பதற்கும் என தெரிவித்தால் நாம் அடைய நினைக்கின்ற நல்லிணக்கம் நீதிக்கு அப்பாற்பட்ட அணுகுமுறையா என்ற கேள்வி எழுகின்றது. நீதி நல்லிணக்கத்திற்கான அடிப்படையாக அமையவேண்டும். எனவே தான் கிழக்கில் நடைபெறவுள்ள எழுக தமிழுக்கு நாம் அணிதிரள்வதில் தடங்கல்கள் இல்லை.
இப் பேரணி கொண்டுள்ள அபிலாசையினையும் கொள்கையினையுமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனமும் கொண்டிருந்தது. எனவே இதனை கூட்டமைப்பிற்கு முரணானது என குழம்பவேண்டிய அவசியமும் கிடையாது. அதேவேளை கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குழைப்பதற்கான முயற்சியாகவும் யாரும் இதனை பயன்படுத்தக்கூடாது. இவ்விடயங்களின் அடிப்;படையில் நாம் எமது ஆதரவை வழங்குகின்றோம்.
கருத்துகள் இல்லை: