வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நடத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடைவடிவமைத்தல் மற்றும் அழகுக் கலை, மனைப்பொருளியல் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை (16.02.2017) நடைபெற்றது. நெடுந்தீவு பிரதேச செயலாளர் சி.விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கண்காட்சியைப் பார்வையிடுவதையும் கற்கைகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மாணவியருக்கு சான்றிதழ்களையும் நிறுவனத்திற்கு தனது மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் பெறுமதியான ஊக்குவிப்புப் பொருட்களை வழங்குவதையும் படங்களில் காணலாம். இக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக கிராம அபிவிருத்திததிணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.பஞ்சலிங்கம் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக நெடுந்தீவு உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஆர்.சர்வேந்திரன், பிரதேச செயலக கணக்காளர் ஆ.நிர்மல், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.அன்கு ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை: