யாழ் மாவட்ட சர்வோதயமும் தேசோதயமும் இணைந்து நடாத்திய மக்கள் திலகம் எம்.ஜீ.ஆரின் நூறாவது ஜனன தினமும் பல்துறை சார்ந்த கலைஞர்களின் கௌரவிப்பு நிகழ்வும் லயன் கலாநிதி நா.தனேந்திரன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.02.2017) நடைபெற்றது. சர்வோதய மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ஏ.நடராஜனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் பேராசிரியர் சிவலிங்கராஜா, ஆசிரியர் இரா.செல்வவடிவேல், ஓய்வுபெற்ற ஆசிரியர் கே.ஏ.முத்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். படங்களில் விருந்தினர்கள் வரவேற்கப்படுவதையும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கலைஞர் ஒருவரை கௌரவிப்பதனையும் நிகழ்வினில் கலந்துகொண்ட ஆர்வலர்களில் ஒருபகுதியினையும் காண்கின்றீர்கள்.

கருத்துகள் இல்லை: