Ads Top


யாழ். பூம்புகார் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த புதன்கிழமை (15.02.2017) பாடசாலை அதிபர் க. கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், சிறப்பு விருந்தினரான உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் சண்.தயாளன், கௌரவ விருந்தினர்களான கியூடெக் கரித்தாஸ் நிறுவன இணைப்பாளர் செல்வி ம. பத்மசேகரி, கிராமசேவகர் கு.மகிந்தன் ஆகியோர் பாடசாலைச் சமூகத்தினால் அழைத்து வரப்படுகின்றனர். மேலும், போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதையும் வெற்றியீட்டிய வீர வீராங்கணைகளுக்கு பிரதம விருந்தினராகப் பங்கேற்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்குவதையும் படங்களில் காணலாம். 









கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.