
வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரனையில் காரைநகர் பிரதேச செயலகத்தினரால் முன்னெடுக்கப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் கண்காட்சி காரைநகர் பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் தலைமையில் கடந்த செவ்வாய்கிழமையன்று(14.02.2017) நடைபெற்றது. காரைநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கண்காட்சியினைத் திறந்து வைப்பதனையும் நிலையத்தினால்
பயிற்றுவிக்கப்பட்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதனையும் காணலாம். மேலும், வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தனது மாகாண சபை உறுப்பினர் நிதியில் 50 ஆயிரம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்து நிலையத்திற்குத் தேவையான துணிவகைகள் மற்றும் ஏனைய மூலப்பொருட்களை நிகழ்வில் கையளிப்பதையும் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நா. பஞ்சலிங்கம், கௌரவ விருந்தினர்களான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. யூட்ததேயுஸ், தொழிலதிபர் க.சோமசுந்தரம் ஆகியோர் மாணவர்களின் கைவண்ணங்களைப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
கருத்துகள் இல்லை: