வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அணுசரனையுடன் தீவகம், தெற்கு வேலணை பிரதேச செயலகத்தினால் நடத்தப்படும் மண்டைதீவு மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக் கலை மனைப்பொருளியல் கண்காட்சி கடந்த வியாழக்கிழமை (09.02.2017) மண்டைதீவு மகாவித்தியாலத்தில் நடைபெற்றது.வேலணை பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டனர். படங்களில், பிரதம விருந்தினர்கள் நாடாவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்து கண்காட்சியைப் பார்வையிடுவதையும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், ஆடை வடிவமைத்தல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு தமது தொழில் முயற்சிகளை தடையின்றி முன்கொண்டு செல்வதற்காக மூலப்பொருட்களை வழங்குவதையும் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்களை படங்களில் காணலாம். இக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.பஞ்சலிங்கமமும் கௌரவ விருந்தினர்களாக மண்டைதீவு மகா வித்தியாலய அதிபர் கே.எஸ்.இளங்கோ, கிராம உத்தியோகத்தர்களான எம். சுசிகாந்த், என்.உதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை: