யாழ்.கொக்குவில் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையின் செயற்பாட்டு மகிழ்வோம் திறனாய்வுப் போட்டிகள் பாடசாலையின் அதிபர் திருமதி புஸ்பராஜா தலைமையில் பரிசுத்த திருத்துவ தேவாலய மைதானத்தில் நடைபெற்றன. நேற்று வியாழக்கிழமை (09.03.2017) நடைபெற்ற இப் போட்டிகளுக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் சிறப்பு விருந்தினராக நல்லூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எப்.எக்ஸ் அன்டன்,
கௌரவ விருந்தினராக யாழ் வலய ஆரம்பக் கல்வி விளையாட்டு செயற்றிட்ட இணைப்பாளர் சி.சிவகாந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர். படங்களில்இ மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதையும் அதனை விருந்தினர்கள் மற்றும் ஏனையோர் பார்வையிடுவதையும் உச்சளவில் திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட விந்தன் கனகரத்தினம் சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்குவதையும் காணலாம்.
Reviewed by
gajan
on
மார்ச் 09, 2017
Rating:
5
கருத்துகள் இல்லை: