
யாழ். செட்டித்தெரு மெ.மி.த.க.பாடசாலையின் செயற்பாட்டு மிகழ்வோம் திறனாய்வு போட்டிகள் கடந்த வியாழக்கிழமையன்று ( 02.03.2017) அதிபர் திருமதி கமலராணி சிவராஜா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், சிறப்பு விருந்தினராக நல்லூர் கோட்ட கல்விப் பணிப்பாளர் எப்.எக்ஸ். அன்டன், கௌரவ விருந்தினராக கிராமசேவகர் கந்தையா பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். படங்களில், விருந்தினர்கள் அழைத்து வரப்படுவதையும் மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டுவதையும் உச்ச திறமைகளை வெளிக்கொணர்ந்த சிறார்களுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பரிசில்களை வழங்குவதையும் காணலாம்.







கருத்துகள் இல்லை: