Ads Top

மக்களின் பிரச்சினைகளை கேட்கக்கூட முடியாத ஜனாதிபதியின் அறம் என்ன? - விந்தன் கனகரத்தினம் கேள்வி


போராடிக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவுகளையும் வேலையற்ற பட்டதாரிகளையும் ஜனாதிபதி யாழ் விஜயத்தில் சந்திக்காமை கண்டிக்கத்தக்கது. தன்னை பதவிக்குக் கொண்டுவந்த தமிழ் மக்களின் பிரச்சினையில் அவரது கரிசனை கேள்விக்குட்;படுகின்றது. மகிந்த ராஜபக்சவின் அச்சுறுத்தல்களையும் தாண்டி வாக்களித்த சமூகங்களுக்கு
ஜனாதிபதி செய்யும் நன்றிக்கடன் இதுவா என்ற அரசியல் ஒழுக்கம் சர்ந்த வினாவையும் தொடுக்கத் துண்டுகின்றது.



 இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.


காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் வேலையற்ற பட்தாரிகளை கடந்த சனிக்கிழமையன்று ஜனாதிபதி யாழ் விஜயத்தில் சந்திக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தமது பிரச்சினைக்குத் தீர்வு கேட்டுப் போராடிக்கொண்டிருக்கும் வலிந்து காணாமல் போனோர் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் சந்திக்கச் சென்றிருந்த போதும் ஜனாதிபதி அவர்களைச் சந்திக்கவோ பதிலளிக்கவோ இல்லை. 

இந்நிலையிலேயே, போராடிக்கொண்டிருக்கும் தரப்புக்களுடன் ஆதரவளித்துக்கொண்டு இருக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்; மேலும் தெரிவிக்கையில்,

ஆளுநர் அலுவலகத்தில் “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள”; என்ற அலுவலகம் திறக்கப்பட்டபோதே அங்கு தமது பிரச்சினைகளுக்காக சென்ற மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே சர்வதேசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் தமிழ் மக்களின் பிரச்சினையினை அணுகுவதாகக் காட்டிக்கொண்டு ஆனால் மக்களின் பிரச்சினையினை அணுகாத அரசாங்கத்தின் இரட்டைவேடம் இதிலிருந்து தெரிகின்றது. 

இன்றைய ஜனாதிபதியை, பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சவின் நெருக்கடிகளையும் தாண்டி தமிழ் மக்கள்  வாக்களித்தே தெரிவு செய்தவர்கள். அன்று தேர்தல் பிரசாரத்தின் போது மைத்திரியை ஆதரிப்பது என்பது கடும் அச்சுறுத்தல் மிகுந்த ஒன்றாகவே இருந்தது. இந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தமது உரிமைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை பதவிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையிலேயே மைத்திரிக்கு நாம் வாக்களித்தோம். சில சமயம் தமிழ் மக்கள் வாக்களிக்காதிருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று கம்பி எண்ணியிருக்கவேண்டும். ஒருசமயம் அவ்வாறு நடைபெற்றிருந்தால், தன்னால் இரக்கம் காட்டப்படாது இன்றும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையை கண்டு அவர் வெதும்பியிருப்பார்.   இதில் சரத்பென்சேகாவின் வாழ்க்கையினை அவர் புரட்டிப்பார்க்கவேண்டும். 

இத்துடன் மைத்திரியைக் கொண்டுவர எத்தனித்த தமிழ் மக்கள் மீது ஒருவேளை மகிந்த வென்றிருந்தால் எனக்கு எதிராகப்போட்டியிட்டவரை ஆதரித்தீர்கள் என அவேசம் கொண்டு இராணுவத்தினரை தான் அவர்; ஏவியிருப்பார். வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவாக தீவகத்தில் நான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எனது வாகனம் கூட மகிந்த ராஜபக்சவின் அடியாட்களால் அடித்து நொருக்கப்பட்டது. இதற்கு ஊர்காற்றுறை நிதிமன்றின் பதிவுகள் சாட்சியாகும். இது எல்லாவற்றினையும் தெரிந்துகொண்டு, சாவையும் எதிர்கொண்டே எங்கள் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றே மைத்திரியை பதிவிக்குக் கொண்டு வந்தோம்.  இவை பற்றியாவது ஜனாதிபதி மைத்திரிக்கு புரிந்துணர்வு இல்லையா எனக்கேட்கத்தோன்றுகின்றது. 
தேர்தலில் மைத்திரியை எதிர்த்து மைகிந்தவின் பிரச்சாரப்பிரங்கிகளாக வலம் வந்தவர்கள் இன்று அவரின் ஆலோசகர்களாகவும் சகாக்களாகவும் அவரின் குளிரூட்டப்பட்ட சௌகரியமான சபைக்குள் இருக்கின்றனர். ஆனால் அர்ப்பணிப்புடன் அவருக்காக வாக்களித்த தரப்புக்களின் பிரச்சினையினைகள் அணுகப்படாது வீதியில் இருக்கின்றனர். இதிலிருந்து ஜனாதிபதி மைத்திரியின் அரசியல் அறம் என்ன எனக்கேட்கின்றோம். 


வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் கண்ணீர் ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களின் பரம்பரையையே உய்யவிடாது. இதனை தெரியாவிட்டால் உண்மையான பௌத்த அறம் தெரிந்தவர்களிடம் கேட்டு அரசியல் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

வேலைற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகூட அரசினால் தான் உருவாக்கப்பட்டது. தொழில் சந்தைக்கு ஏற்ற கல்வி முறையினை உருவாக்க முடியாது போனமை அரசின் இயலாமையாகும். அரசினால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களிலேயே மாணவர்கள் படித்தார்கள். அம் மாணவர்களது பிரச்சினையினை இரண்டாம் தர பிரச்சினையாக யாரும் கருதக்கூடாது. விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். நாம் இதற்று ஒத்துழைப்பாக இருப்போம். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.