Ads Top

யாழ்.அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் பாடசாலை அதிபர் ச.மனோகரன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(03.02.2017) நடைபெற்றது. இப்போட்டிகளில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் சிறப்பு விருந்தினர்களாக தீவகத்தின் ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் ச.பாஸ்கரன் மற்றும் அருட்தந்தை டேவிட் அடிகளார் உட்பட மேலும் சிலர்
கலந்துகொண்டனர். படங்களில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதையும் விருந்தினர்கள் போட்டிகளைப் பார்வையிடுவதையும் வெற்றிபெற்ற வீர வீராங்கணைகளுக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பரிசில்களை வழங்குவதையும் படங்களில் காணலாம்.











கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.