சுவிசர்லாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அரசியல் முதன்மைச் செயலாளர் டமியனோ அஞ்சலோ சுவாய்டமட்டியை வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள கெறிட்டேச் விடுதியில் 08.02.2017அன்று சந்தித்து சமகால விடயங்கள் தொடர்பில் ஒரு மணிநேரம் கலந்துரையாடினார். தற்போதும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள மனித உரிமைகள் மீறல் விடயங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், மீள்குடியேற்றம், யாழ். தீவக பகுதிகளின் அபிவிருத்தி, மக்கள் இயல்புவாழ்க்கைக்குத் திரும்புவதில் உள்ள தடைகள் பற்றியும் இச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை: