யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலயத்தின் மாணவன்; வசந்தராசா டிலக்சன் பல்நோக்குடைய உயிரி அடுப்பொன்றை கண்டுபிடித்து தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இச் சாதனையைப் படைத்த மாணவனைக் கௌரவிக்கும் நிகழ்வு வத்தியாலய அதிபர் திருமதி சி.இராசரத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், கண்டுபிடிப்பினை மேற்கொண்ட மாணவன் கௌரவிக்கப்பட்டு அழைத்து வரப்படுவதையும் அம் மாணவனுக்கும் அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினரும் விழாவின் பிரதம விருந்த
ினருமான விந்தன் கனகரத்தினம் கௌரவித்து பரிசில்களை வழங்குவதையும் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட தீவக வலய கல்வி பணிப்பாளர் சு. சுந்தரசிவம் அருகில் நிற்பதையும் பாடசாலையின் பழைய மாணவியும் கனடாவில் வசிப்பவருமான திருமதி.சாந்தி கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டு மாணவரை கெளரவிப்பதையும் படங்களில் காணலாம். ஏற்கனவே தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வசந்தராஜா டிலக்சன் வடமாகாண மட்டத்தில் வவுனியாவில் நடைபெற்ற போட்டிகளில் சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை: