Ads Top

யாழ். எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை (07.02.2017) பாடசாலை அதிபர் ச.கமலதீபன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் சிறப்பு விருந்தினர்களாக ஊர்காவற்றுறை கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம். சத்தியசீலன், தீவக வலயத்தின் உடற்கல்விப் பணிப்பாளர் எம்;.லோகநாதன் உட்பட சிலரும் கௌரவ விருந்தினர்களாக வித்தியானந்தாக்
குருக்கள் மற்றும் இராஜசிங்கம் அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டனர். படங்களில், மாணவர்கள் தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதையும் பிரமுகர்கள் அதனைப் பர்வையிடுவதையும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வெற்றியீட்டிய வீரவீராங்கணைகளுக்கு பரிசில்களை வழங்குவதையும் காணலாம்.











கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.