மண்டைதீவில் ஒருமாத லேயர் வகை கோழிக்குஞ்சுகள் விநியோகம்
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களின் முயற்சியினால் மத்திய அமைச்சினால் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட சுயதொழில் முயற்சி ஊக்குவிப்பு உதவித்திட்டத்தின் கீழ், வட மாகாணசபை உறுப்பினர் கே. என். விந்தன் கனகரத்தினத்தின் சிபார்சில், யாழ் மண்டைதீவுப் பகுதியில் அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு பெரும் சிரமப்படும் வறிய நிலையில் உள்ள பதினைந்து குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு ரூபா நாலாயிரம் வீதம் பதினைந்து குடும்பங்களுக்கும் ரூபா அறுபது ஆயிரம் பெறுமதியான ஒரு மாத லேயர் வகை கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.
இந்த வகைக் கோழிக்குஞ்சுகளை நல்ல வகையில் பராமரித்து வளர்த்து வரும் பட்சத்தில் வருடத்திற்கு ஒரு கோழி முன்னூறு வரையான முட்டைகளை இடக்கூடிய இனமாக இந்த இனம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வு இன்று (12.05.2017) வேலணை பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி திரு. யூட் தலைமையில் மண்டைதீவு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நடைபெற்றது. பயனாளிகளுக்கான கோழிக்குஞ்சுகளை வட மாகாணசபை உறுப்பினர் மற்றும் வேலணை கால்நடை திணைக்கள போதனாசிரியர், வேலணை பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி திரு. யூட் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் சசிகாந், உதயராசா ஆகியோரும் இணைந்து பயனாளிகக்கு வழங்கி வைத்தனர்.











கருத்துகள் இல்லை: