யா/ வேலணை வங்களாவடி மத்திய சிறுவர் முன்பள்ளியும் முடிப்பிள்ளையார் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய விளையாட்டு விழா - 2017
யாழ்/ வேலணை வங்களாவடி மத்திய சிறுவர் முன்பள்ளியும் முடிப்பிள்ளையார் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய விளையாட்டு விழா 24.03.2017 வெள்ளிக்கிழமை அன்று மத்திய சிறுவர் முன்பள்ளி ஆசிரியர் அ. கிரிசா தலைமையில் நடைபெற்றது. வங்களாவடி முருகன் ஆலய வீதியில் பிற்பகல் 01.30 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில், யாழ். மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர் திரு. கே. என். விந்தன் கனகரத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஆ.குமாரதாசன், யாழ். வலய ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு. பொ. அருணகிரிநாதன், பொது சுகாதார உத்தியோகத்தர் திரு. கு. செந்தில்குமரன், வேலணை இலங்கை வங்கி முகாமையாளர் திரு. வி வதனதீசன், வேலணை ஒன்றியத் தலைவர் திரு. ந. ஜெகநாதன் ஆகியோரும், இன்னும் கௌரவ விருந்தினர்காளாக பாடசாலை அதிபர்கள், முன்பள்ளிகளின் பொறுப்பாளர்கள், இணைப்பாளர்கள், பொது அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் விருந்தினர்கள் முன்பள்ளி மாணவர்களின் பாண்ட வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்படுவனையும், பிரதம விருந்தனர் அவர்கள் உரையாற்றுவதனையும், மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைப்பதனையும், மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.















கருத்துகள் இல்லை: