யா/ எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா
யாழ்/ எழுவைதீவு பனித தோமையார் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று முன்தினம் (22.03.2017) புனித தோமையார் முன்பள்ளி மைதானத்தில் முன்பள்ளி இயக்குனர் திரு. யோ. லோ. சாள்ஸ்குயின்சன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர் திரு. கே.என். விந்தன் கனகரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக ஊர்காவற்றுறை பங்குத்தந்தை அருட்பணி P.F இராஜசிங்கம், ஊர்காவற்றுறை வலய முன்பள்ளி இணைப்பாளர் திருமதி யோ. பாரதி, எழுவைதீவு ஆரம்ப சுகாதார மருத்துவப்பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் நன்னித்தம்பி மகேஸ்வரி, ஏழுவைதீவு கிராம சேவகர் திரு. க. ஆருரான் ஆகியோரும், இன்னும் சிறப்பு விருந்தினர்காளாக பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் விருந்தினர்கள் முன்பள்ளி மாணவர்களின் பாண்ட வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்படுவனையும், பிரதம விருந்தனர் அவர்கள் உரையாற்றுவதனையும் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைப்பதனையும், மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.














கருத்துகள் இல்லை: