Ads Top

மகளிர் அபிவிருத்தி நிலையங்களுக்கு ரூபா மூன்று இலட்சம் வட மாகாணசபை உறுப்பினர் கே. என். விந்தன் கனகரத்தினம் அவர்கள் ஒதுக்கியுள்ளார்





வடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான கே.என்.விந்தன் கனகரத்தினம் தனக்குரிய 2017 ஆம் ஆண்டுக்கான பிரமான அடிப்படை யிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் மகளிர் அபிவிருத்தி நிலயங்களில் ஆடை வடி வமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் மற்றும் கைவினை செயல் முறை போன்ற பயிற்சிகளை இவ் வருடம் மேற் கொள்ளும் மாணவிகளுக்கு மூலப்பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக ரூபா மூன்று இலட்சம் ஒதுக்கியுள்ளார்.


வேலணை, நெடுந்தீவு, காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை மகளிர் அபிவிருத்தி நிலையங்களுக்கு ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம் வீதம் நான்கு நிலையங்க ளிற்கும் ரூபா மூன்று இலட்சம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த மகளிர் அபிவிருத்தி நிலையங்களுக்கு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. பஞ்சலிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் நேரடியாகச் சென்று தேவைகள் குறைபாடுகள் தொடர்பாக போதனாசிரியர்கள்,  மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்க ளின் கோரிக்கைகளுக்கு அமைவாக மாகாணசபை உறுப்பினர் நிதி ஒதுக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.