Ads Top

பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் தளபாடக் கொள்வனவிற்காக ரூபா இருபத்து நாலு இலட்சத்து ஐம்பது ஆயிரம் வட மாகாணசபை உறுப்பினர் கே. என். விந்தன் கனகரத்தினம் அவர்கள் ஒதுக்கியுள்ளார்






வடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான கே.என். விந்தன் கனகரத்தினம் தனக்குரிய 2017 ஆம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாட சாலைகளின் புனரமைப்பு மற்றும் பாடசாலைகளுக்கான  தளபாட கொள்முதல் என்பவற்றிற்காக ரூபா இருபத்து நாலு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ஒதுக்கியுள்ளார்.

பாடசாலைகளின் அதிபர்கள்,  ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் தங்கள் தங்கள் பாடசாலைகளுக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்களை அழைத்துச் சென்று தங்கள் பாடசாலைகளின் தேவைகள் குறைகள் தொடர்பாக  கலந்துரையாடியதைத் தொடர்ந்து,  இத் தேவைகளின் முக்கியத்து வத்தை அறிந்த மாகாணசபை உறுப்பினர் முன்னுரிமை அடிப்படையில் நிதிகளை ஒதுக்கியுள்ளார்.


யா. மண்டைதீவு றோ.க.த.க. பாடசாலை  புனரமைப்பு மற்றும் தளபாடக் கொள்வனவுக்காக இரண்டு இலட்சம், யா. அல்லைப்பிட்டி றோ.க.த.க. பாடசாலை  புனரமைப்புப் பணிக்காக இரண்டு இலட்சம், யா. வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் புனரமைப்புப் பணிக்காக இரண்டு இலட்சம், யா. வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயம் கனணி மற்றும் தளபாடக் கொள்வனவுக்காக இரண்டு இலட்சம்,  யா. வேலணை சைவப்பிகாச வித் தியாலயம் புனரமைப்புப் பணிக்காக ஒரு இலட்சம்,  யா. எழுவைதீவு முருக வேள் வித்தியாலயம் கனணி கொள்வனவுக்காக ஒரு இலட்சம், யா. புங்குடுதீவு இராஜராஜேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் போட்டோ பிரதி இயந்திரம் கொள்வனவுக்காக ஒரு இலட்சம், யா. ஊர்காவற்றுறை சென். மேரிஸ் றோ.க.பெண்கள் வித்தியாலயம் பாண்ட் (Band) வாத்தியக் கருவிகள் கொள்வனவுக்காக ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம், யா. அரியாலை பூம்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை   பல் ஊடுக எறிகை (Multi Media) மற்றும் தளபாடக் கொள்வனவுக்காக ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம், யா. கொக்குவில் ஸ்தான சி.சி.த.க.பாடசாலை புனரமைப்பு மற்றும் தளபாடக் கொள்வனவுக்காக இரண்டு இலட்சம்,  யா. கொக்குவில் மேற்கு சி.சி.த.க. பாடசாலை புனரமைப்புப் பணிக்காக ஒரு இலட்சம், யா. செட்டித்தெரு மெதடிஸ் மிசன் தமிழ் கலவன் பாடசாலை   பல் ஊடுக எறிகை (Multi Media), ஒலிபெருக்கிப் பெட்டி (01) (Speaker Box) , பேச்சு மேசை(01) (SpeechcTable), வெற்றி  மேடை (01) கொள்வனவுக்காகவும் மற்றும் பாடசாலை மதில் புனரமைப்புக்காகவும் இரண்டு இலட்சம், யா. கோண்டாவில் இந்துக் கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கான கழுத்துப் பட்டிகள் (Tie) மற்றும் காலுறைகள் (Socks) கொள்வனவுக்காக எழுபத்து ஐந்து ஆயிரம், யா.நெடுந்தீவு றோ.க. மகளிர் வித்தியாலயம் புனரமைப்புப் பணிக்காக ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம், யா. நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயம் மைதான புனரமைப்புப் பணிக்காக எழுபத்து ஐந்து ஆயிரம், யா. நெடுந்தீவு சீக்கிரியான் பள்ளம் அ.த.க. வித்தியாலயம் புனரமைப்புப் பணிக்காக எழுபத்து ஐந்து ஆயிரம், யா. மண்டைதீவு புனித பேதுருவானவர் முள்பள்ளி   புனரமைப்புப் பணிக்காக எழுபத்து ஐந்து ஆயிரம், யா. அரியாலை அரு ணோதயா சன சமூக நிலைய முன்பள்ளி  உபகரணங்கள் கொள்வனவுக்காக ஒரு இலட்சம் என பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக  ரூபா இருபத்து நாலு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது..

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.